search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன் விரோத தகராறு"

    தண்டையார்பேட்டையில் முன் விரோத தகராறில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி (28). ஆட்டோ டிரைவர். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று மாலை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே உள்ள முள்புதரில் மூர்த்தி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இதில் ஆட்டோ டிரைவர் மூர்த்தி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. கடந்த வருடம் திருமலை (29) என்பவைரை அரிவாளால் வெட்டியதால் மூர்த்தி ஜெயிலுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த திருமலையிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் திருமலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் மூர்த்தியை கொலை செய்தது தெரிய வந்தது.

    நேற்று மதியம் திருமலை அவரது நண்பர்கள் சரவணன், பசுபதி, மோகன் ஆகியோர் மூர்த்தியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக மூர்த்தியை சந்தித்த அவர்கள் இனி பழைய பகையை மறந்து நண்பர்களாக இருப்போம் என்று கூறினார்கள்.

    அனைவரும் மது அருந்தி மகிழ்ச்சியாக இருப்போம் என்று கூறி மூர்த்தியை மணலிக்கு அழைத்து சென்றனர். அங்கு எல்லோரும் மது குடித்தனர். அப்போது மூர்த்திக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்தார்.

    திரும்பும் வழியில் கொருக்குப்பேட்டை-மணலி சாலை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே மூர்த்தியை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை 4 பேரும் சேர்ந்து கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    பின்னர் பிணத்தை தண்டையார்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே முள்புதரில் வீசி சென்றனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருமலை உள்பட 4 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை அருகே முன் விரோத தகராறில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த குருங்குளம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பாலன் அடியாட்களுடன் வல்லத்தில் வசிக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ராஜாவின் சகோதரி சந்திரா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து பாலன் தரப்பினர் சந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த பாலன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    இந்த தாக்குதலில் சந்திரா பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜா வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலன், விஜயா, குமார் , குப்பன் மற்றும் சிங்கா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன் விரோத தகராறில் முதியவரை கத்தியால் குத்திய விவசாயி போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்தேரடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமுவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாமை சுப்புராயன் (70) என்பவர் பஞ்சாயத்து பேசியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சுப்புராயனுக்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுப்புராயன் வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் கத்தியால் சுப்புராயன் உடலில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கீழே சாய்ந்து கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சுப்புராயனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அங்கு சுப்புராயன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சுப்புராயனை கத்தியால் குத்தியதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என செல்வராஜ் பயந்தார். இன்று அதிகாலை அவர் அதே பகுதியில் தனது அண்ணன் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலம் இன்ஸ் பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×